"விஜயின் பிறந்த நாளில் த்ரிஷா" -போட்டோவை பார்த்தா அசந்துடுவீங்க!

நடிகர் விஜய் நேற்று தன்னுடைய 51 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் .இந்த பிறந்த நாளை முன்னிட்டு நடிகை த்ரிஷா போட்ட பதிவு சோசியல் மீடியாவை உலுக்கியுள்ளது
நடிகர் விஜயின் பிறந்த நாளை அவரின் தமிழக வெற்றி கழக கட்சியினரும் ,ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடினர் .இந்நிலையில் அவரின் கட்சியினர் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர் .அவரின் ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .இந்நிலையில் நடிகை திரிஷா விஜயுடன் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளார் .அவரும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போட்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .மேலும் நடிகை நயன்தாரா முதல் இயக்குனர் வெங்கட் பிரபு வரை விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போட்டனர்
நேற்று இரவு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து திரிஷா ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் சோஃபாவில் விஜய் அருகே திரிஷா அமர்ந்திருக்கிறார். அப்போது திரிஷா வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியான இஸ்ஸியை கையில் தூக்கி கொஞ்சியபடி இருக்கிறார் விஜய். இஸ்ஸியை தன்னுடைய குழந்தை போல் வளர்த்து வருகிறார் திரிஷா. அந்த நாய்க்குட்டிக்காக ஒரு இன்ஸ்டா பக்கத்தையும் வைத்திருக்கும் அவர், அதில் இஸ்ஸியின் தாய் நான் தான் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், Happy Birthday Bestest என குறிப்பிட்டுள்ளார் திரிஷா. அவரின் இந்த பதிவு தான் தற்போது செம வைரலாகி வருகிறது.