ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் விமல்.. ‘துடிக்கும் கரங்கள்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ThudikkumKarangal
விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிராமத்து கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விமல். அவரின் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்து வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளார்.

ThudikkumKarangal

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story