'தக் லைஃப்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு...!

கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
One Rule No Limits!
— Raaj Kamal Films International (@RKFI) April 1, 2025
65 Days to go #ThugLife#ThugstersFirstSingle Coming soon#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath @trishtrashers @AshokSelvan @AishuL_ @C_I_N_E_M_A_A… pic.twitter.com/ZxBSXdV60a
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. அதில் இன்னும் திரைப்படம் வெளியாக 65 நாட்கள் மட்டுமே இருக்கிறது என தெரிவித்துள்ளனர். வீடியோவில் கமல்ஹாசனின் சிறுவயது புகைப்படத்தில் இருந்து தற்போது வரை உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இப்பாடலிற்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.