ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தக் லைஃப் மேக்கிங் வீடியோ

நாயகன் படத்திற்கு பிறகு கமல் மணிரத்னம் கூட்டணியில் வெளியாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .இப்படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக விறுவிறுப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர் .
இப்படத்தில் கமலுடன் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர் .இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் கன்னட மொழி பற்றி பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையானது .இதனால் கர்நாடகாவில் இப்படம் வெளியாக வேண்டுமானால் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை வைத்தது .இதனால் இப்படம் அங்கு வெளியாக வில்லை .பல சர்ச்சைக்கிடையே ரிலீஸ் ஆகியுள்ளது .
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
https://youtu.be/BXOFNr1DRIE?si=XmsJbPefAWhV-0KJ
சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்