அதி விரைவில் ஓடிடிக்கு ஓடி வந்த தக் லைஃப் -எப்போது தெரியுமா ?

ஜூன் 5ந் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகியது . இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் , இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில ப்ரோமோஷன்கள் நடந்து வந்தது. இந்த திரைப்படத்தில் கமலுடன் த்ரிஷா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது, கன்னட மொழி சர்ச்சை, கேரள ரசிகர்களுக்காக ஜோஜூ ஜார்ஜை படத்தில் இணைத்தது, இளைஞர்களை கவர சிலம்பரசனை படத்தில் இணைத்தது, ஜிங்குச்சா பாடல் ஹிட் அடித்தது என சமூக வலைதளங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் படம் இறுதியில் தோல்வியை சந்தித்துள்ளது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் என்றதும் நாயகன் படம் போலிருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் டிரெய்லர், டீசர் ஆகியவற்றை வைத்து படம் உலக தரத்தில் இருக்கும் என ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படம் இதுவரை ரூ.90 கோடித்தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தக் லைப் படம் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வருகிற ஜூலை 4-ந் தேதி வெளியாகுவெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து 8 வாரங்களுக்கு பிறகே ஓ.டி.டியில் வெளியாகும். ஆனால் தக் லைப் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவருதால் திட்டமிட்ட தேதி முன்னரே ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.இப்படத்தை நாம் விரைவில் ஓடிடியில் எதிர்பார்ப்போம் .