லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் தக் லைஃப் -கர்நாடகா தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கடந்த 5ம் தேதி தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆனது .கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை .இதற்கு காரணம் கமலஹாசன் இந்த படத்தில் ஆடியோ ரிலீஸ் விழாவில் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துக்கள் .இந்த பேச்சுக்கு கன்னட மொழி பேசுவோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இப்படத்தை கர்நாடகவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கூறினர் .
கோர்ட்டில் கமல் வழக்கு தொடுத்த போது கமல் மன்னிப்பு கேட்க சொல்லி கோர்ட் கூறியது .ஆனால் கமல் மன்னிப்பு கேட்கவில்லை .இதனால் இப்படத்தை மீறி கர்நாடகவில் ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம் என்று சில கன்னட அமைப்புகள் மிரட்டியது .இதனை எதிர்த்து கர்நாடகத்தை சேர்ந்த மகேஸ்ரெட்டி என்பவர் சுப்ரீம் கோா்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகாவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதியளித்தது .தற்போது சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கி இருப்பதால், தக் லைப் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் முன்வந்துள்ளனர்.அதாவது பெங்களூருவில் தக்லைப் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை.கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடும்போது திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது