சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்த 'தக் லைஃப்' படக்குழு

kamal

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், அணியினருக்கு ’Thug Life’ படகுழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொளவதை ஒட்டி தக் லைஃப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், கமல்ஹாசன், எம்.எஸ்.தோனி ஒருபக்கமும் சிம்பு, ருதுராஜ் மறுபக்கமும் இடம்பெற்றுள்ளனர்.

Share this story