"கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகும் தியேட்டருக்கு தீ வைப்போம்" -மிரட்டும் கன்னட அமைப்புகள்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது .இதற்கு பல கன்னட நடிகர்கள் மற்றும் கன்னட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் .ஆனால் கமல் அதற்கு ஒத்து கொள்ள வில்லை .இந்நிலையில் வரும் 5 ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது
இந்நிலையில் கன்னட ரஷன வேதிகே அமைப்பு தலைவர் நாராயண கவுடா தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, " தமிழர்களைக் கவர கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் தக் லைஃப் படத்தை திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் பொது வெளியில் தியேட்டரைக் கொளுத்துவோம் என்று மிரட்டல் விட்ட இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு பேச்சு உலா வருகிறது.
இந்த நிலையில் இதுபற்றி நடிகை சுதாராணி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர், 'நம்ம கன்னட மொழி குறித்து ஆதாரம் இருந்தால் அதை காண்பித்து அவர்களுக்கு கமலஹாசன் தெளிவுபடுத்த வேண்டும். நம்ம நாடு, மொழி குறித்து இதுபோல் பேசுவது தவறு. இதற்கு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் "என்று கூறியுள்ளார்