40 மில்லியன் பார்வைகளை கடந்த ‘தக் லைஃப்’ ட்ரைலர்..!

trailer

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் டிரைலர் இணையத்தில் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.  


படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே வெளியான ஜிங்குச்சா பாடல் செம வைரலானது.thug life  இந்நிலையில்,  ‘தக் லைஃப்’ படத்தின் டிரைலர் இணையத்தில் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 

Share this story