விரைவில் வெளியாகும் பாபி சிம்ஹாவின் ‘தக்ஸ்’ டிரெய்லர்.. வீடியோ வெளியீட்டு படக்குழு அறிவிப்பு !

thugs

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ டிரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வரும் இந்த படத்தை பிருந்தா மாஸ்டர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ஆர்.கே.சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் முனிஸ் காந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடித்துள்ளனர். 

thugs

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியாஷிபு என்பவர் தயாரித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அடியாட்களுக்கு இடையே நடக்கும் வன்முறை சம்பவங்களை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 


 

Share this story