"மிகவும் ஸ்டைலிஷான படமாக இது இருக்கும்’ -துல்கர் சல்மான் கூறும் படம் எது தெரியுமா ?

thulkar
துல்கர் சல்மான், கயாடு லோஹர் நடித்துள்ள படம் ‘ஐ அம் கேம்’. ‘எனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை நடித்துள்ள படங்களில், மிகவும் ஸ்டைலிஷான படமாக இது இருக்கும்’ என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள மிகப் பிரமாண்டமான ஆக்‌ஷன் திரில்லர் படமான இது, வரும் ஆகஸ்ட்டில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. வேஃபரர் பிலிம்ஸ் சார்பில் துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஷஹபாஸ் ரஷீத், ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
முக்கிய வேடங்களில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்க, இரட்டையர் அன்பறிவு சண்டை பயிற்சி அளித்துள்ளனர். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். மனு மஞ்சித், விநாயக் சசிகுமார் பாடல்கள் எழுதியுள்ளனர். சமன் சாக்கோ எடிட்டிங் செய்துள்ளார்.

Share this story