புனே திரைப்பட விழாவில் இடி முழக்கம் படம்

புனே திரைப்பட விழாவில் இடி முழக்கம் படம்

முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘இடி முழக்கம்’ இந்த படத்தில் ஜி வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு பெற்ற நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடிந்தன. கிரமத்து கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.   படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிபார்ப்பை எகிறவைத்தது. 

புனே திரைப்பட விழாவில் இடி முழக்கம் படம்

சரண்யா பொன்வண்ணன், சுபிக்‌ஷா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், புனே திரைப்பட விழாவில் இடிமுழக்கம் திரைப்படம், இந்திய திரைப்பட பிரிவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் உள்பட ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 

Share this story