ரியல் வின்னர் vs பொங்கல் வின்னர்... மிரட்டலான போஸ்டர்கள் வெளியீடு !

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து மிரட்டலான போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் பொங்கலையொட்டி அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படமும் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் வெளியான இந்த இரு திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றனர்.
அஜித் மற்றும் விஜய் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதால் இரு படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் இரண்டு திரைப்படங்களுக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டு படங்களும் சமமான வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மிரட்டலான போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரியல் வின்னர் என்று ‘துணிவு’ படத்தின் போஸ்டரும், பொங்கல் வின்னர் என்று ‘வாரிசு’ படத்தின் போஸ்டரும் ஹைலைட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் யுத்தம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.