ஒரே நாளில் மோதும் ‘துணிவு’ - ‘வாரிசு’ ... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

thunivu and varisu

‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அஜித்தின் டாப் ஆக்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

thunivu and varisu

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தையும் ஜனவரி 11-ஆம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். 

thunivu and varisu

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடுவது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Share this story