கண்மணியாக நடிக்கும் மஞ்சு வாரியர்.. அஜித்திற்கு என்ன கதாபாத்திரம் ?

thunivu

‘துணிவு’ படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

thunivu

வரும் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனமும், வெளிநாட்டில் லைக்கா நிறுவனமும் வெளியிடவுள்ளது. 

thunivu

இந்நிலையில் இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர்கள் மோகனசுந்தரம் ‘மை பா’ என்ற கதாபாத்திரத்திலும், பிரேம் ‘பிரேம்‘ என்ற கதாபாத்திரத்திலும், பக்ஸ் ராஜேஷ் கதாபாத்திரத்திலும், ராதா கதாபாத்திரத்தில் வீராவும், முத்தழகன் என்ற கதாபாத்திரத்தில் ஜிஎம் சுந்தரும்,ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் அஜய்யும் நடித்துள்ளனர். 

thunivu

அதேபோன்று தயாளன் என்று போலீஸ் கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும், கண்மணி கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் அஜித் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதையொட்டி கதாபாத்திரம் என்ன என கேள்வி எழுப்பி போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.  

Share this story