நாளை தாறுமாறு அப்டேட் இருக்கு.. ‘துணிவு’ குறித்து முக்கிய அறிவிப்பு !

ajith

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் அஜித் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. 

ajith

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்தை வெளிநாட்டில் லைக்கா நிறுவனம் வெளியிடவுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரம் இந்த அறிவிப்பு டிரெய்லர் குறித்து தான் என தகவல் வெளியாகியுள்ளது.  

Share this story