அஜித்திற்கு உதவும் கலைஞர் கருணாநிதி... வைரலாகும் பழைய ட்வீட் !

thunivu

கலைஞர் கருணாநிதியின் பழைய ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

thunivu

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 480 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கிய நிலையில் டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது. 

thunivu

அதேநேரம் 'துணிவு' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பழைய ட்வீட் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அதில் 'துணிவு இருந்தால் துக்கம் இல்லை. துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் 'துணிவு' படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story