'துணிவு' ப்ரோமோஷனில் பங்கேற்கிறாரா அஜித் ?.. மேலாளர் கொடுத்த விளக்கம் !

thunivu

'துணிவு' படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் அஜித் கலந்துக்கொள்வதாக வந்த தகவலுக்கு அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.  

எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'துணிவு'. ஹீரோ, வில்லன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் இந்த படத்தில் நடித்து வருகிறார். அதனால் இந்த படம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ரசிகர்கள் மிதந்து வருகின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். 

 

80-களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் வட மாநிலங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளது. 

thunivu

பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதனால் இந்த நிகழ்ச்சியில் அஜித்தை பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதில்லை என்ற கொள்கையுடன் இருப்பவர். அதனால் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது குறித்து அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஒரு நல்ல படம் தனக்கான விளம்பரத்தை தானே தேடிக்கொள்ளும். அதில்தான் எல்லையற்ற அன்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். 


 

Share this story