'துணிவு'- வை வரவேற்க தயாரான ரசிகர்கள்... திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம் !

thunivu

'துணிவு' படம் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். 

எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  பொங்கலையொட்டி இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகவுள்ளது. 

 thunivu

இதையொட்டி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் ஒன்றுக் கூடியுள்ளனர். மாலை முதலே திரண்ட ரசிகர்கள் பெரிய கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து கட்அவுட்டுகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

thunivu

'துணிவு' படம் வெளியாவதையொட்டி பல திரையரங்குகளில் செண்டை மேளத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் பனியையும் பொருட்படுத்தாமல் திரையரங்கு வாயிலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே ஒரு வாரத்திற்கு படம் ஹவுஸ்புல்லாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story