ஒரே நாளில் இத்தனை வியூஸ்களா... புதிய சாதனை படைத்த 'துணிவு'

thunivu

'துணிவு' படத்தின் டிரெய்லர் ஒரே நாளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரபல வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு'. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களிலும் அஜித்தே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

thunivu

இந்த படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. 

நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆர்முடன் எதிர்பார்த்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதே நேரம் இந்த ட்ரெய்லர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் யூடியூப்பில் வெளியான இந்த ட்ரெய்லரை ஒரே நாளில் 20  மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 

 

Share this story