சரவெடியாய் வெடிக்கப்போகும் ‘துணிவு’... டிரெய்லர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. அஜித்தின் மாஸான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா, பக்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படம் வெளியாவதையொட்டி படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.