துணிவுக்காக தயாரானது இத்தனை தீம்-களா... ஜிப்ரான் கொடுத்த சூப்பர் அப்டேட் !

ghibran

'துணிவு' படத்தில் பயன்படுத்தாத தீம்கள் விரைவில் வெளியிடப்படும் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு'. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர்,  சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கைன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வங்கி கொள்ளை ஒன்றை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்து‌. 

ghibran

இந்த படம் கடந்த 11-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. வங்கியில் நடக்கும் கொள்ளை ஒன்றை தடுக்கும் நபராக நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சுமார் 175 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

ghibran

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். அவர் இசையில் வெளியான காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா, சில்லா சில்லா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தன. இதுதவிர படத்தில் இடம்பெற்ற தீம்களும், பின்னணி இசையும் பேசப்படியாக இருந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக 33 தீம்கள் படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அந்த தீம்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசைப்படுத்தியுள்ள ஜிப்ரான், விரைவில் அதை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தீம்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


 

Share this story