100 கோடியை எட்டிய ‘துணிவு’- அப்போ ‘வாரிசு’ நிலைமை?

photo

அஜித்தின் ‘துணிவு’ ,விஜய்யின் ‘வாரிசு’ என இரண்டு படமும்  ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில் இரண்டு படங்களும் ரசிகர்களின் ஆதரவை வெகுவாக பெற்றுள்ளது. அதே சமயம் படம் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அப்போ வாரிசுன் நிலை என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

photo

இவ்விரு படங்களும் தமிழகம் மட்டும் இன்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் பொங்கல் ரேஸில் விஜயை விட அஜித்தின் துணிவு படம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இது கூறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மூன்றே நாட்களில் உலக அளவில் துணிவு திரைப்படம் 100 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. அதாவது முதல் நாளில் 39 .65 கோடியும்இரண்டாவது நாளில் 20.39 கோடியும், மூன்றாவது நாளில் 18.41 கோடி வசூலித்துள்ளது.

photo

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக வந்த விஜய்யின் வாரிசு படமும் வசூலை வரி குவித்தாலும் துணிவு அளவிற்கு இல்லை என் கூறப்படுகிறது. எனினும் இன்றுதான் தெலுங்கில் படம் ரிலீஸ்ஸாகியுள்ளது, போக போக வசூல் விவரம் எப்படி வேண்டுமானால் மாறலாம். என்ன நடக்க போகிறது என்பதை பின்நாட்களில் பார்க்கலாம்.

photo

Share this story