‘துணிவு’ டிரெய்லர் டே... இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள் !

thunivu

‘துணிவு’ படத்தின் டிரெய்லர் வெளியாவதையொட்டி ரசிகர்களை இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thunivu

வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து ஜிப்ரான் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த டிரெய்லர் எப்படி இருக்கும் என்று பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் இணையத்தளமே முடங்கி வருகிறது என்றே சொல்லலாம். 

Share this story