“துணிவு-வாரிசு” சமம்- உதயநிதி ஸ்டாலின்; கொண்டாட தயாராகும் ரசிகர்கள்:

photo

எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில்துணிவு’ திரைப்படம் உருவாகி ரிலீஸிற்கு தயராக உள்ளது. அஜித்தின் 61வது படமாக உருவாகியுள்ள  இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். 

photo

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி இருக்கும், இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுதவிர தொலைக்காட்சியை உரிமையை கலைஞர் டிவியும், டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது.

photo

அதே போன்று வரும் பொங்களை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படமும் வெளியாகவுள்ளது. விஜய் மற்றும் வம்ஷி படைப்பள்ளி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்துள்ளதுஇந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்திலிருந்துரஞ்சிதமேரஞ்சிதமே…’ படல் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங்கில் நம்பர்ஒன் இடத்தை பிடித்துள்ளது.இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ஓடிடி நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் வாங்கியுள்ளன.

photo

 

கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால்   தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் வரும் என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது, அனால் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏறபடுத்தியுள்ளது, அதாவது தமிழகத்தில் ‘வாரிசு’-‘துணிவு’ என இரண்டு படங்களுக்கும் சமமான அளவு திரைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

Share this story