பொங்கல் ரேஸ்ஸின் வின்னர் யார்? துணிவா? வாரிசா? – முதல் நாள் கலெக்க்ஷன் இதோ:

photo

துணிவு, வாரிசு, இந்த இரண்டு வார்த்தைகள் தான் கடந்த சில மாதங்களாக அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை எனலாம், அதற்கு காரணம் நீண்ட இடைவெளைக்கு பிறகு தல தளபதி படங்கல் ஒன்றாக ஒரேநாளில் ரிலீஸ் ஆவதுதான், அந்த வகையில் ரசிகர்களின் இமாலைய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்றையதினம் வெளியான இவ்விறு படங்களும் எவ்வளவு வசூலை வாரியுள்ளன? எந்த படத்திற்கு முதல் இடம் என்பதை பார்க்கலாம்.

photo

குடும்ப ஆடியன்ஸ்ஸை கவர்ந்த விஜய்யின் ‘வாரிசு’ படமும், ஆக்க்ஷனில் கலக்கி பக்கா மாஸ்படமாக தயாரான அஜித்தின் ‘துணிவு’ படமும் நேற்று அதிகாலை 1மணிக்கு ஒரு படம், 4மணிக்கு ஒரு படம் என வெளியானது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் துணிவு திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.26 கோடியும்,விஜயின் வாரிசு படம் உலக அளவில் ரூ.26.5கோடியும் வசூலை வாரி குவித்து முதலிடம் பிடித்துள்ளது. கிட்டதட்ட சமமாகதான் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

photo

தொடர்ந்து சென்னையைப் பொறுத்தவரை துணிவு திரைப்படம் முதல் நாளில் ரூ.3.75 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ.3.95 கோடியும் வசூலித்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் துணிவு படம் தான் அதிகளவு வசூல் ஈட்டி உள்ளது. அப்படம் முதல் நாளில் ரூ.19 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது. வாரிசு படத்துக்கு தமிழ்நாட்டில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. தொடர்ந்து  அடுத்தடுத்த நாட்களில் நிலவரம் எப்படியிருக்கும் என்பதை காணலாம்.

Share this story