நடிகர் விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்?

vishal

நடிகர் விஷாலுக்கு  ஜோடியாக நடிக்க துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களில் நடிக்க திட்டமிட்டார் விஷால். ஆனால், பட்ஜெட் பிரச்சினையால் எதுவுமே நடைபெறாமல் இருந்தது. இதனால் தனது நிறுவனம் மூலம், ரவி அரசு படத்தினை அவரே தயாரித்து நடிக்க முடிவு செய்துவிட்டார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிப்பதற்கு துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அவரும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுதாகும் எனக் கூறப்படுகிறது.vishal

ரவி அரசு படத்தினை முடித்துவிட்டு, ‘துப்பறிவாளன் 2’ படத்தினை விஷால் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்து முடித்துவிட்டுதான் படம் இயக்கும் பணிகளைத் தொடங்குவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story

News Hub