'மாமன்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்....!

சூரி நடித்துள்ள 'மாமன்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.
The wait is over! Maaman film tickets are now live — grab yours now through the link belowhttps://t.co/iwO04u9Udhhttps://t.co/xDXQzKLPKg#MaamanFromMay16
— Actor Soori (@sooriofficial) May 14, 2025
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1@AishuL #Swasika #RajKiran… pic.twitter.com/2lUdvFBTZz
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி இருக்கிறது. இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகஉள்ள நிலையில், தற்போது டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.