சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..

retro

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின்  டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 

நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.  


அதையொட்டி படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், ரெட்ரோ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது

Share this story