ஓடிடி தளத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம்

ஓடிடி தளத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திருச்சிற்றம்பலம் திரைப்படம், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம்

யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர்  இயக்கத்தில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் இப்படத்தில் நாயகிகளாக நடித்திருந்தனர். இது தவிர, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஓடிடி தளத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம்

படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி பல மாதங்கள் கழித்து, தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. 
 

Share this story