மீண்டும் கமலுடன் இணையும் பிரபல இயக்குனர்... எதற்காக தெரியுமா ?

kamal

 பிரபல இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் கமலஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகநாயகன் கமலஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்று விடும் என்று கூறப்படுகிறது. 

kamal

அதேநேரம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ‘இந்தியன் 2’ படத்தை முடித்து மணிரத்னம், பா ரஞ்சித், வெற்றிமாறன் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவிருக்கிறார். அடுத்தடுத்த இயக்குனர்கள் வரிசைக்கட்டி நிற்பதால் வேகமாக பணியாற்றி வருகிறார் கமல்ஹாசன். 

kamal

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிகர் கமல் நடிக்கவுள்ளாராம். ‘உத்தமவில்லன்’ படத்தில் ஏற்பட்ட  நஷ்டத்தை ஈடு செய்வதற்காக அந்த தயாரிப்பு நிறுவனத்தில் படத்தில் நடிப்பதாக உறுதியளித்துள்ளாராம். 

Share this story