விஜே சித்து இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

YouTube மூலம் பிரபலமான விஜே சித்து கதாநாயகனான அறிமுகம் ஆகவுள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
YouTube மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் விஜே சித்து. பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டிராகன்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜே சித்துவின் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது.
We’re super kicked 🔥 to drop our next wild ride #Dayangaram ! Welcoming @VJSiddhuOG 🤙🏻 to the world of cinema as hero and director. Get ready for one big Dayangaramaana padam! https://t.co/DjHvQobSfu@IshariKGanesh @VelsFilmIntl @kushmithaganesh @nitinsathyaa @prosathish… pic.twitter.com/GugfccP8XO
— Vels Film International (@VelsFilmIntl) May 2, 2025
இந்நிலையில், விஜே சித்து அவரே இயக்கி நடிக்கும் படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டயங்கரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதில் விஜே சித்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.