இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர் டிரைலர்’ - அலப்பறை செய்யும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

photo

சூப்பர் ஸ்டாரின் மாஸ்ஸான ஆக்ஷன் அதிரடியில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. முத்துவேல்பாண்டியன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள இப்படம் இம்மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

photo

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தின் Show Case இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ஜெயிலர் டிரைலர் என இணையத்தை அதிரவிட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

Share this story