பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று... திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து...

பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று... திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து...

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இதையடுத்து, கார்த்தி மற்றும் கலையரசன் நடித்த மெட்ராஜ் என்ற திரைப்படத்தை இயக்கினார். சுவற்றின் மீதான அரசியலை இத்திரைப்படம் பேசியது. இப்படத்தின் வெற்றியை அடுத்து ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் ரஜினி மாறுபட்ட வேடத்திலும், நடிப்பிலும் அசத்தி இருப்பார். தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து காலா என்ற திரைப்படத்தை இயக்கினார் பா ரஞ்சித். அடுத்து, சார்பட்டா பரம்பரைபடத்தின் மூலம் குத்துச்சண்டை அரசியலை திரைப்படுத்தினார். தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் களம் இறங்கி பல சமூக நலன் சார்ந்த படங்களை தயாரித்து வருகிறார். 

பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று... திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து...

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர், தயாரிப்பாளர் பா ரஞ்சித்துக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Share this story