டிராகன் படத்தில் இணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள்...!

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'டிராகன்' படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் டிராகன் படத்தை ஏ. ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
Thankyou for being part of #DRAGON my dearest and lovable directors .
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 9, 2024
An @Dir_Ashwath araajagam@Ags_production @archanakalpathi @aishkalpathi pic.twitter.com/jFJmB0IQHf
அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன் ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிராகன் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்ட வண்ணம் உள்ளன. அதுப்படி கயடு லோஹர் , பிரபல யூ டியூபர்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் நடிக்கவுள்ளதாக தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் தற்பொழுது மிஷ்கின் , மயில்வாணன் என்ற கதாப்பாத்திரத்திலும். கவுதம் வாசுதேவ் மேனன் வேல் குமார் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர் என போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.