"எனக்கு அரசியல் செய்யும் எண்ணம் இல்லை"-கோபத்துடன் பதிவிட்ட டாப்ஸி
1788575415000
முன்னணி நடிகைகள் டாப்ஸி, கங்கனா ரனவத் ஆகியோருக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. டாப்ஸியை ‘பி-கிரேடு நடிகை’ மற்றும் ‘போலி தயாரிப்பின் மலிவான நகல்’ என்று கங்கனா ரனவத் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அவரது குடும்பம், வளர்ப்பு குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியில், ‘எனது வளர்ப்பு, பேச்சு மற்றும் அணுகுமுறைக்கு ஏற்பவே எனது கருத்துகள் இருக்கும். யார் எந்த பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். எனக்கு அரசியல் செய்யும் எண்ணம் இல்லை’ என்றார்.

