டாக்குமென்ட்ரி படமான 'அஜித்'தின் சுற்றுப்பயணம் – தயாரித்தது யார் தெரியுமா?
நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் பயணம், கார் ரேஸிங், துப்பாக்கி சுடுதல் என பல தனித்திறமைகளை கொண்டவர். இந்த நிலையில் அஜித்தின் பைக் பயணம் தற்போது டாக்குமெட்ரி படமாக தயாராகியுள்ளது.
படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நடிகர் அஜித் பைக்கில் உலகம் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம். தனியாகவோ, நண்பர்கள் குழுவுடனோ பல மைல்கள் பைக் சுற்றுபயணம் மேற்கொள்ளும் அஜித்தின் பயணம் டாக்குமென்ரியாக தயாராகியுள்ளது.
அதாவது கடந்த வருடம் அஜித் நடிப்பில் தயாரான துணிவு பட சூட்டிங் கேப்பில் வடமாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட அஜித்துடன் அந்த படத்தின் நாயகியான மஞ்சுவாரியரும் சென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த பயணத்தின் போது துணிவு படத்தில் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷாவும் கலந்து கொண்டாராம். அதற்கு காரணம் அஜித்தின் அந்த பயணம் முழுவதையும் படம்பிடித்து டாக்குமென்ரியாக மாற்றி அஜித் குடும்பத்திற்கு வழங்கினாராம். அந்த டாக்குமென்ரி பொது வெளியில் வராது என்றாலும். அஜித் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இதை செய்து அவர்களது குடும்பத்திற்கு அருமையான நினைவை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் நீரவ்ஷா.