நடிகர் தனுஷ்-க்கு கதை சொன்ன 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர்...!
1747207908748

'டூரிஸ்ட் பேமிலி' வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அபிஷன் ஜீவ்னித், நடிகர் தனுஷ்-க்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார் நடித்து சமீபத்தில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ரூ. 50 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்தது. சினிமா துறையை சார்ந்த ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தை பார்த்த தனுஷ் இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவ்னித்தை சந்தித்து அவருக்கு தகுந்தவாறு கதை உள்ளதா என கேட்டுள்ளார். அவரும் தனுஷுக்கு ஒரு கதையை கூறியுள்ளார். விரைவில் இது அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.