‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் ரிலீஸ்...!

சசிகுமார் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். அதன்படி இருவரும் கணவன் – மனைவியாக நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
#TouristFamily - Exclusive stills from the sets 🎬
— Million Dollar Studios (@MillionOffl) April 3, 2025
Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical 🎶 @SasikumarDir @SimranbaggaOffc @Foxy_here03 @barathvikraman @MillionOffl @MRP_ENTERTAIN@Yuvrajganesan @mageshraj @MithunJS5 @iYogiBabu @thilak_ramesh… pic.twitter.com/c3uTdtE3WR
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.