"டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம்" : இயக்குனர் சமுத்திரக்கனி

samuthirakani

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி பாராட்டியுள்ளார். 


அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே.1 ஆம் தேதி   வெளியாக உள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.


 இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு நேற்று (ஏப். 26) சென்னையில் நடைபெற்றது. இதில், சசிகுமார், விஜய் ஆண்டனி, சமுத்திரகனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய சமுத்திரகனி, “இந்தப் படத்தைப் பார்த்தபோது மிகவும் கனமாக இருந்தது. அன்பை, அறத்தை போதிக்கக்கூடிய திரைப்படமான டுரீஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம். படத்தின் கிளைமேக்ஸில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. சசிகுமாரைப் பார்த்து கையெடுத்து கும்பிட வேண்டும்போல் இருக்கிறது.
இப்படத்தை முன்பே பார்த்திருந்தால், நானும் ஏதாவது வேலை செய்திருப்பேன். இதுவரை யாருமே இப்படியொரு படத்தை எடுக்கவில்லை. சசிகுமாருக்கு சுப்ரமணியபுரம் அமைந்ததுபோல் எனக்கு நாடோடிகள் அமைந்ததுபோல் அபிஜனுக்கு டுரீஸ்ட் ஃபேமிலி." எனத் தெரிவித்துள்ளார்.

Share this story