டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் `ஆச்சாலே' பாடல் ரிலீஸ்..

சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 2வது பாடல் `ஆச்சாலே' வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
“Aachaley” - Next fun song from #TouristFamily is out now 🥳🤙
— Think Music (@thinkmusicindia) April 16, 2025
🔗https://t.co/2GdHW9tzD3
Time to hit play, dance your heart out & let the good vibes roll 🎉#TouristFamilyFromMay1st
Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical 🎶 @SasikumarDir… pic.twitter.com/AfHVMZeZ3w
படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ஆச்சாலே' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.