‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!

‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது. 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது.
Mark your date to welcome the most loved family on June 2nd ❤️ #TouristFamily streaming from June 2 on #JioHotstar @abishanjeevinth @RSeanRoldanmusical @sasikumardir @SimranbaggaOffc @Foxy_here03 @barathvikraman @Yuvrajganesan @mageshraj @MithunJS5 @iYogiBabu @dirbucks… pic.twitter.com/Yy3EvS5NJZ
— JioHotstar Tamil (@JioHotstartam) May 27, 2025
இந்நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி இருந்தனர். தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 2ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.