‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
THE WAIT IS OVER 🥳🥁#TouristFamily - Releasing in Theatres Worldwide on MAY 1st 🌟
— M.Sasikumar (@SasikumarDir) March 25, 2025
Pack your bags & get ready to embark on an unforgettable journey in cinemas 🤗❤️
Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical
@SimranbaggaOffc @Foxy_here03 pic.twitter.com/NkI53vrAcY
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது அந்த வகையில். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.