3டி-யில் வெளியாகும் டொவினோ தாமஸின் ஏ.ஆர்.எம் திரைப்படம்
1726036229000

மலையாள நடிகரான டொவினோ தாமஸ் தற்பொழுது ஏ.ஆர்.எம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இப்படத்தை ஜித்தின் லால் இயக்கியுள்ளார். மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் UGM மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ் , மலையாளம் உட்பட ஆறு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் மூன்று தலைமுறை கதாப்பாத்திரங்களை கொண்டது. டொவினோ மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கிருத்தி ஷெட்டி, ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் சுர்பி லக்ஷ்மி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கன்னடத்தில் இப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் விநியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.