டொவினோ தாமஸ் பிறந்தநாள் ஸ்பெஷல் : 'எம்புரான்' பட கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த படக்குழு..!

டொவினோ தாமஸ் பிறந்தநாளை முன்னிட்டு 'எம்புரான்' படத்தின் அவரது கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்”. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். ’லூசிஃபர்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு ’எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார்.இதனிடையே பிருத்விராஜின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில், இப்படத்தில் பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்திருப்பதை போஸ்டர் உறுதி செய்தது. மேலும் இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Happy Birthday Jathin! #TovinoThomas
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 21, 2025
Power…is an illusion! #L2E #EMPURAAN #March27 @mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje #GeorgePius @ManjuWarrier4 @ttovino @Indrajith_S @deepakdev4u… pic.twitter.com/6SAJOoTgTd
இந்த நிலையில், நடிகர் டொவினோ தாமஸ் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், ’எம்புரான்” படத்தில் அவரது கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. போஸ்டரில், வெள்ளை நிற குர்தா-பைஜாமாவில் அமைதியாக நிற்கும் டோவினோ தாமஸ், ஜதின் ராம்தாஸ் என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். பி.கே. ராம்தாஸின் பிரமாண்டமான உருவப்படம் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. இவை இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஒரு சுவாரஸ்யமான கதை தொடர்பை காட்டுகிறது. அதுதொடர்பான போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.