100 கோடியை நெருங்கும் ‘2018’... டோவினோ தாமசை கொண்டாடும் ரசிகர்கள் !
டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘2018’ திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘2018’. கடந்த மே 5-ஆம் தேதி வெளியான இப்படத்தை ஜூட் அந்தனி ஜோசப் ஆண்டனி இயக்கியுள்ளார். இந்த படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு நோபின் பால் இசையமைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற பெரு வெள்ளத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 4 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் 93 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. விரைவில் 100 கோடி லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கேரளாவில் 40 கோடியை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.