டொவினோ தாமஸ் - திரிஷா நடித்த Identity பட அப்டேட்

identity
டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ஏ.ஆர்.எம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. திரிஷா நடிப்பில் நேற்று விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது. அப்படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

Share this story