வித்தியாசமான காதல் கதையில் ‘டிராவல்ல ஒரு காதல்’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் ‘டிராவல்ல ஒரு காதல்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான பாணியில் படங்களை இயக்கி ரசிகர்களை கவர முயற்சித்து வருகின்றனர் அறிமுக இயக்குனர்கள். அப்படி கடந்த 2019- ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ழகரம்’. மர்ம நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் நந்தா கதாநாயகனாக நடித்தார்.

இந்த படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர் க்ரிஷ்-ன் அடுத்த படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘டிராவல்ல ஒரு காதல்’. வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். அதாவது ஒரு பயணத்தில் நிகழும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு கவா கம்ஸ் மற்றும் ரியா மூர்த்தி இணைந்து கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். அஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசாந்திரி பிரொடக்ஷ்ன்ஸ் மற்றும் டிகே மீடியா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

