ட்ரெண்டான Boycott சாய் பல்லவி.. ரிலீஸ் நேரத்தில் அமரனுக்கு வந்த சிக்கல்

வாய்ப்பு கிடைத்தால் போதும் என எல்லா படங்களையும் கமிட் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் சாய்பல்லவி ரொம்பவே வித்தியாசமானவர். எனக்கு பிடித்தால் மட்டும் தான் நடிப்பேன் இல்லை என்றால் எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் நோ என சொல்லி விடுவார்.
அதேபோல் பட விழாக்களில் கிளாமர் உடையில் நடிகைகள் கலக்கும் போது இவர் மட்டும் அம்சமாக புடவை கட்டிக்கொண்டு வருவார். இப்படி இவருடைய ஒவ்வொரு செயலும் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து இவரை அவர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர வைத்துள்ளது.
தற்போது இவர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் படத்தில் நடித்த முடித்துள்ளார். இன்னும் சில தினங்களில் அதாவது தீபாவளிக்கு இப்படம் தியேட்டருக்கு வருகிறது. அதற்கான ப்ரமோஷனில் இவர் இப்போது பிஸியாக இருக்கிறார்.
Sai Pallavi called Indian Army 'Pakistani Terrorist', people's patriotism got hurt- tell me how many innocent people we killed..!!#BoycottSaiPallavi pic.twitter.com/Uo0fGXT4eS
— Vivek Sharma (@_Mr_Vivek_) October 28, 2024
ஆனால் அமரன் படத்திற்கு எதிராக இப்போது நெட்டிசன்கள் ஒன்றுகூடி இருக்கின்றனர். அதாவது சாய் பல்லவி சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பட ப்ரமோஷன் போது பேசிய ஒரு வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் நான் காஷ்மீரி பைல்ஸ் என்ற படத்தை பார்த்தேன். அதில் இந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டினார்கள். அதே போல் மாடு வைத்திருந்த இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி சிலர் தாக்கி கொன்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மதப்பற்றை வைத்து இன்னொருவரை துன்புறுத்தக் கூடாது அப்படித்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் ஆக பார்க்கின்றனர். இருதரப்புக்கும் இடையே இருக்கும் பார்வைகள் வேறுபடும். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என கூறி இருந்தார். அப்போதே இந்த விவகாரம் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி இருந்தது.
அதையடுத்து சாய்பல்லவி நான் சொன்ன கருத்து வேறு மாதிரி புரிந்து கொள்ளப்பட்டது என குறிப்பிட்டு இருந்தார். அதை தற்போது வைரல் செய்து வரும் இணையவாசிகள் அமரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்து வருகிறது. சாய்பல்லவி சொன்ன விஷயத்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. பல வருடங்களுக்கு முன்பு அவர் பேசியதை மீண்டும் இழுத்து பிரச்சினை செய்வது சரியல்ல என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.