கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..! என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

1
’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அஜித் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக அவரை பார்ப்பதற்காக சென்னை திரும்பினார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அஜீத் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷாவின் வரவுக்காக படக்குழுவினர் காத்திருப்பதாகவும் அவர் வந்த பின்னர் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதுவரை படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயாருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இன்று அவரது தாயாருக்கு பிறந்த நாளை அடுத்து இந்த கேக் வெட்டும் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் த்ரிஷாவுக்கு நெருக்கமான சிலர் மட்டும் கலந்து கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை த்ரிஷா கேக் வெட்டி தனது தாயாருக்கு ஊட்டி விடும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனேகமாக இந்த வார இறுதியில் நடிகை த்ரிஷா ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜர்பைஜான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story